Friday, December 30, 2011

உழைப்பு

விதை என்ற உழைப்பால்
விதை போடு
நாளை எதிர்காலம்
மரமாய் நிமிரிந்து நிற்கம்

Monday, November 28, 2011

எதிர்காலம்

எதிர்காலம் என்ன என்பதை
சோதிடம் பார்கதே;
உழைப்பை மட்டும்
நம்பி திறமையே
வெளியே கொண்டுவா
வெற்றியோடு நடைபோடலாம் எதிர்காலத்தை நோக்கி;

Friday, July 1, 2011

வெற்றி

வெற்றிகளை காண சில துன்பகளை
சகித்துகொள்;

தோல்வி உன்னை துரத்தும்
முயச்சி செய்தல் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம்;

துன்பங்கள் உன்னை தேடி வருவதுபோல்
தோன்றும்;
ஆனால், அது உண்மையில்லை

உன் வெற்றி யாரோ பரிபதுபோல் தோன்றும்
அதுவும் உண்மையில்லை

வெற்றி கனிசுவைக்க துரத்திவரும்
சுமைகளை தாங்கிகொள்;

முடியுமென்று முயன்றால்
சீன சுவரையும் தலையால் முட்டி இடித்துவிடலாம்;

உன் முயச்சிகளை மட்டும் நம்பிவிடு
தோல்வி என்றும் உன்னை நெருங்காது;

Wednesday, March 23, 2011

Win

Keep Good Friends with you, they will show a way to win.

Tuesday, March 22, 2011

என் உயிர் தோழன்

உயிரே தந்தது தாய்
உருவத்தை தந்தது தந்தை
வாழ்க்கை பாடத்தை வழி நடத்தியது
ஆசிரியர்;
ஆனால்,
உயிரேவிட நட்பு சிறந்தது என்று
உணர்த்தியது நீதானே நண்பா;

Friday, March 4, 2011

உங்கள் கருத்து

இதுவரை பெற்றோர்களுகாக
வாழ்ந்தது போதும்
கொண்டுபோய் முதியோர்
இல்லத்தில் விடும்படி
கூறினாள்;

சேர்த்துவிட்டேன் அவள்
பெற்றோரிடத்தில் அவளே;

வேண்டாம் வேகம்

விதி(rules) மறந்து
வீதியில் விதவிதமாய்
கோலத்தை போல வட்டமிட்டு
வேகமாய் சென்றால்
நீயும் அலங்கோலமாவாய்
எதிரில்வரும் வாகனத்தில்
அடிபட்டு;

Thursday, March 3, 2011

எதனால் விபரிதம்

பேசிக்கொண்டே வாகனம்
ஒட்டாதே!
மீறினால்
கூடி பேசிகொள்வார்கள்
சிரித்து பேசிவந்தவன்
சிதைந்து போனான் என்று;

மீன்

என்ன அழகாய்
தண்ணிரில் விளையாடுகிறது
பாவம்
நாளை என்வீட்டு
சட்டியில்
குழம்பு ஆவதை
தெரியாமல்;

காதல்

ஒரு வரியில்
காதலே சொல்லுவாய்
என்று
இருந்தேன்;

ஆனால், நீயோ

ஒரு வரியில்
'சாரி' என்று சொல்லு விட்டு
சென்றாய்;

காதல்

ஒரு வரியில்
காதலே சொல்லுவாய்
என்று
இருந்தேன்;

ஆனால், நீயோ

ஒரு வரியில்
'சாரி' என்று சொல்லு விட்டு
சென்றாய்;

நண்பன்

முட்கலா தெரிந்த
என்
பாதையில்
மலர்துவி நடக்க வைத்தவன்;

தோல்வி வந்த போதல்லாம்
தட்டி கொடுத்து
வெற்றி அடைய
தோள் கொடுத்தவன்;

தவறு செய்தபோதல்லாம்
சுட்டிகாட்டியவன்;

இருளா போக இருந்த
என் வாழ்கையில்
விளக்கேற்றியவன்;

காதல இழந்தவன் கூட
வெற்றி அடைய முடியும்
ஆனால்,
நட்ப இழந்தவன்
இந்த உலகில்
வாழ முடியாது;

Monday, February 28, 2011

இன்றிய காதல்

வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகம்னு
சொன்னார்கள்;
சிரித்து பார்த்தேன்
போனது நோயில்லை
என் காதல்!

கனிவான காதல் முத்தம்

விழியால் வட்டமிட்டு
விரலால் கோலமிட்டு
சலனமில்லாத இரவில்
என் இதயத்தை
அலைபயாவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சென்றால்!

Friday, February 25, 2011

நீயில்லை! உன் தங்கை

எத்தனையோ முறை காத்திருந்தேன்
உன்னக்காக?
விடைசொல்லி திருமண பத்திரிக்கை
தந்துவிட்டு சென்றாய்

பரவாயில்லை இதுவும் நல்லதுதான்
உன்னைவிட உன் தங்கை
குமென்று இருகின்றாள்
காத்திருப்பேன் நாளைமுதல்
அவளுக்காக

குழந்தை

தினமும்
அதிகாலையில் முத்தமிட்டு
எழுப்புகிறாள்
நானும் எழுகிறேன்
ஆனந்தமாய்

சிந்திய சிரிப்பில்
சிந்தனை செய்ய
தூண்டுகிறாள்

ஏதோ சொல்கிறாள்
புரியாமல்
என்ன சொல்கிறாள் என விடை
தேடுகிறேன்

நாம் என்ன செய்கிறோமோ
அதை திரும்ப செய்யும்
கிளி பிள்ளை

கருப்பு

நான் கருப்பு என்று
விலகி செல்லாதே
கருப்புதான் உன் புருவத்திலும் கூந்தலிலும்
நிஜங்களாக இருக்கின்றன
என்பதே
மறந்துவிடாதே!

நம்பிக்கை

அன்று
ஓவ்வொரு முறையும்
தோல்வி பயத்தால்
வெற்றி என்னவென்று
செவிகளுக்கு மட்டுமே தெரிந்தது
இன்று
நம்பிக்கயோடு முயன்றதால்
தோல்வி என்னவென்று
மறந்தே போனது
என் செவிகள்!

Thursday, February 17, 2011

இறந்த பின்

நல்லவர்களுக்குத்தான் சொர்க்கத்தில்
இடமாம்;
நானும் பார்கிறேன் இங்கு சைட் அடிக்க
ஒரு பெண்ணும் இல்லையே;

Thursday, February 10, 2011

ஆடவில்லை

தோல்வியின் பாதையில
நடந்து வந்ததால்
வெற்றியிலும்
நடக்க தோன்றவில்லை
அமைதியாய் அமர
தோன்றது

காதல் பிரியன்

சிறகு இழந்த பறவையாய்
துடிக்கிறேன்
உன்னைவிட்டு
பிரிந்த
நாள்முதல்

காதல் பிரிந்தாலம்

நான் என் மனைவியிடமும்
நீ உன் கணவர்யிடமும் காட்டும் அன்பில்
நம் நீனைவுகள் பரிமாறுகிறது

அந்தபுரம்


நீனைவுகளை பெரிதாக்கி
கடைமைகளை தள்ளிபோட்டு
புதிய உலகத்தை தேட துடிக்கம்
சொர்க்கமாம்;

இருள் படிந்த
உலகில்
புதிய சகாப்தம்
படைக்கபோகம் இடமாம்;

காம பசிதிர்க்க
சதுரங்கம் ஆடம்
போர்கலமாம்

Tuesday, January 18, 2011

புதிதாய் பிறக்கிறேன்

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறேன்
புதிய
உலகத்தை படைக்க